Monday, 17 September 2012


நானே தோற்றமும்...
தோன்றியவனும் ஆனேன்.
தானே தோன்றுதலும்,
தோன்றுதலும் தானே....,?!

வேண்டுதல்கள்
வேண்டி கிடக்கின்றன
வேண்டுதல்கள்
யாவென்று?
மறதியை
மறக்க முடியாமல்
தான்
மறுபடியும்
நிகழ்கின்றன
மரணம்.
மன்னிக்கவும்
ஜனனம்.


நாணயம் இல்லாததால்
நாணல்
இந்த நான்.
அறுந்து  போகவே  பற்றி பார்க்கிறேன் .-
தோற்றுப்போகவே வெற்றி  தேடுகிறேன்.-
தலை சுற்றிப் பார்க்கவே
நான் கற்றுப் பார்க்கிறேன்.
எம்மதமும் சம்மதம்
ஆனால் சம்மதம் எம்மதம்?
அம்மதம் அம்மணம்! அதாவது நிர்வாணம்.
ஆதலால் நிர்வாகி - வானம்.
ஆம்,அது - ஞானம்!.

அவனை  சுமந்தால்
அவனுக்காக!
அவன்
இப்பொழுது
அவர் ஆகிறார்..,
காரணம் -
இவன்
இவர் ஆக வேண்டுமே,
ஆதலால்.
எல்லா அப்பனுக்கும்
இதுவே ஜாதகம்!
எல்லா ஜாதகத்திற்கும்
அதுவே காரியம்
எல்லா காரியத்திற்கும்
அவனே தோரணம்
எல்லா தோரணங்களும்
அவனாலே  மாறனும்.!
மாறுதல்கள் மாற வேண்டி
மாற்றங்கள் மாறி கொண்டே
இருக்கின்றன மாறாமல்.








என்னவோ?
என்ன தேவையோ ?
தேவைக்கு..?
தேவைஇல்லாமல்
தேவைகள்
தேவைப்படுவதில்லை.
ஆம் தேவைகள்
உருவாகுவதில்லை
உருவாக்கப்படுகிறது.,
இப்ப கேள்வி
உருவாக்கத்திற்கு
என்ன?
தேவை என்பதே..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1dTYFG-sEDMb4mQPprBJNrfZr8-V4Fw5bVki6FtxPrdtHXJ_9kkzMcLpab7PDq5MyUN5mrY_TT-lQV2Na6Z9UyiMTl9440B2FyVxLN2TAde-arWI01fuGQbUuCoMpYlOKhIz5qx1eHVI/s320/29122011863.jpg

ஒன்று, இரண்டாகும் பொது பன்மையாம்.
ஒன்றுக்குள்- ஆயிரம் பன்மை என்று பண்படாத வரை.



அறிவில்லாததே அறிவு.
இல்லை
அறிய முடியாததே அறிவு.

நாணம் அற்ற பின் நாணயம் ஏது?
எல்லாம் வார்த்தைகள்
அவ்வளவே


அவ்வளவும்.
அறிந்த பின்
அறியாததே ஞானம்

கூடுதல்,
கூடுவதால்
கூடியதும் கூட்டமாக...
கூடுவதுவும் கூட்டமாக.
மாயம் என்பதில்
மரணம் மட்டுமே அர்த்தப்படுகிறது.

தவம்.
பிடிவாதத்தின் கெளரவச்சொல்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9k_3zP95y4wdPbZh8BKgvzckKzalcqNCzkiArSfRa2bHz0jypVnymlkSN-3yDQ03ZMP5TBW2wwU2Ifg3KdDCzauk_N6roMDjKz6khBzXqlXeFEoXFlb8vKLim613ovCMOIgTJxoTIGTQ/s320/44.bmp

தேக உணர்ச்சிகளின்
தெளிவான
சுயநலம்.
ஆண்-பெண்.
வரம்=  கிடைக்கும், முன் நிலை தவம்.
தண்டனை =   கிடைத்த பின் நிலை சிறை.
தவமும் சிறையும் முறையே ...
முறையானவையல்ல
முழுமையானவை.
தனக்கே
தனக்கென ஒர்ந்திருக்கும்போழுது.
தனக்குத்தானே கண்டுபிடித்து
தன்னைத்தானே தொலைக்கும் பொழுது,
தவமும் சிறையும்
வெற்று வார்த்தைகளே.
. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTS41ELcEhpdVfGwBQPBsj-K8GOpq7PcxToV-7dduJtquvHKml_SCSlOFgEtb3SQqa6FFR5p5G2gWAVDt950ad7gBIGSapESrxV3Gwsu7OJI2wcM7XVnZ3qBcv-ZUOeMD4bYIiRnPVSeg/s320/Photo+on+2010-12-09+at+09.41.jpg


                              what next??

No comments:

Post a Comment