நிகழ்ந்தற்க்கும்
நிகழ்விற்கும்
உள்ள போராட்டமே...
இனி நிகழவிருக்கும்
நிகழ்வுகள்.
இதில் உள்ள உண்மைகளின்
தெளிவே...
நம் ஊக்கத்திற்க்கான
விடிவு.
ஆம்.
விடிவே...
நம் ஆரம்பம்..
ஆரம்பமாகவே முடிவும்.
முடிவென்பதே முதலும்.
முதலானதுவே
முகாந்தரமானது.
அதாவது
முகவரியானது.
முகவரியே - யுகவரி.
யுகவரியே - யுக எழுத்து
யுக எழுத்தே - விதி.
விதியே...தலைமை.
தலைமையை...தலைவிதியாக கொண்ட
நம் இருப்பு உணர்வே...
இறுதியும் உறுதியும்.
உறுதியே...நெஞ்சம்.
நெஞ்சத்தின் அனுபவமே...வஞ்சம்.
வஞ்சத்தின் தொடர்பே...உறவுகள்.
உறவுகளின் ஒழுக்க நிலையே...
சுகத்தின் ஆட்சி.
சுகத்தின் ஆட்சியே...
அகத்தின் சாட்சி.
அகத்தின் சாட்சியே...யுகத்தில் காட்சி.
காட்சி - காரணங்களாகும் போது
கற்பனை எழுகிறது.
கற்பனை முற்றுப்பெறும் பொழுது
சிந்தனை சூழுகிறது.
சூழுவதே சூழ்நிலையாக...
சூழ்நிலை என்பது தருணங்கள்.
தருணங்களே தவம்.
தவங்களே தருணங்களை தருவிப்பதும்.
ஆக
தருணங்களை தவறவிடும்
நிகழ்வே மாயம்.
மாயம் எந்நிலையிலும் மடமை.
இதனை ஒத்துக்கொள்ளும் அறிவே...
நம் அற்புதம்.
அற்புதமே...
பக்குவ நிலை.
நிலை என்பது நிலையாமையின்
பதம் என்ற பேரறிவு.
இதுவே நம் ஆற்றல்.
இப்பேருண்மைகளை உணர்ந்து
பேரறிவாளனாக வாழும் கலையே...
பெருநிலை.
பெரிய நிலை.
இந்நிலை பெற்றவர்களே பெற்றோர்கள்.
பெற்றோன் எனும் தன்மையில்
பெற்றதில் நன்றியும்,
பெற்றுக்கொண்டிருக்கும் விருப்பத்தையும்
இணைத்து
பெறப்போவதற்கான விருத்தியையும்,
வித்தினையும் உணர்ந்தான்
அவனே
பெற்றோன்.
ஆக
கடினமாக்குவது எளிது.
அதேநிலையில் எளிதாக்குவதும் கடிது.
ஆக
கடிதென்பதும்
எளிதென்பதும்,
ஒன்றென்ற பக்குவ நிலையே...
நமதெண்ணம்.
நம் எண்ணத்தை
சிந்தித்துணருவதே
உயரிய பகுத்தறிவு.
ஆம்
பேரறிவு.
அதுவே இயற்கை.
இயல்பு.
இறை.
ஆம்
இறை என்பது ஒன்றே
அது
நம்பிக்கை.
நன்மை k.
ஆம்
நன்மை என்பது
பலவாகும்.
அப்படியானால்
பலவானது
நன்மையாகும்.
ஆக
நன்மையே பலமாகும்.
பலமில்லாத
பற்றறிவோடு
உணரப்படுவது
பற்றாக்குறை.
பற்றாக்குறையின் அடிச்சொல்லும்
அடிப்படையும்,அடிமைத்தனமுமே
தீமை.
தீமைக்குண்டான சூழல்.
அப்படியாயின்...
இன்று
நம் வாழ்வின்
இக்காலச் சூழலில்
நம் தேவை பற்றாக்குறையை
தீப்பதுவே.
அதாவது
கலைவதுவே.
அப்படியாயின்...
இன்று
நம்மிடம்
இருப்பது பற்றாக்குறை.
அதாவது
இருப்பது போன்ற
மாய உணர்ச்சி.
அந்த உணர்ச்சியை
உணர்வென்ற
அடுத்த நிலைக்கு
கொண்டு செல்லும்
உயர்ந்த நிலையே
தவம்.
அத்தவமானது...
இன்று
இப்பொழுது
இச்சூழலில்...
நாம் உணராதது.
அதாவது,
நம்மிடம் இல்லாத பலத்தை
நாம் பெற்றுக்கொள்வதே...
ஆனால்
நாம் நம்முடைய
அன்றாட செயல்களை கவனிப்போமேயானால்
நிறைய நிறைய பற்றாக்குறைகளையே
நிரப்பிக் கொண்டிருக்கும்
நாம்,
அபக்குவத்தனத்தில்
அறியாமையுடன்...
ஆழ்ந்த வருத்தத்துடன்...
வளமில்லாத...
வறுமைமிக்க...
ஆரோக்கியமில்லாத...
துன்பமயமான துரோகத்துடன்
ஏக்கங்களுடன்,
ஏளனங்களுடன்
அவநம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்ட
அத்தனை பற்றாக்குறைகளையும்
நாம்,
பலம் என்ற
அந்த மாபெரும்
பொக்கிஷமான மனதில் இட்டு
மறைத்து
மன நெருக்கடியுடன்,
இதுவே
வாழ்க்கை,
வாழ்க்கையே போராட்டம்.
போராட்டமே வீரம் என்று
விபரீதமான கற்பனை
துணைகொண்டு
கல்லறைகொட்டங்களாக
நம்
இருதயத்தை வனமாக்கி...
வாழ்க்கையே போர்க்களம்.
ஏமாற்றுவதே திறமை.
மறைத்து வாழ்வதே நாகரீகம்.
மற்றவரிடம் பிடுங்குவதும்
பின் பதுக்குவதுமே கல்வி.
துரோகமே...வரலாறு.
துஷ்பிரயோகமே நம் இயல்பு.
என பற்றாக்குறை என்னும்
பாசி படர்ந்த சூழல்களில்
நாம் பதியமிட்டு வளர்த்ததே
இந்த தீமை என்ற சொல்.
இது
தீண்டத்தகாதது.
இம்மாதிரியான
இந்த
மாதிரிகள் எல்லாம்
இன்று
நம் நோய் தீர்க்கும் மாத்திரைகளாகி
நம் அமைதிக்கான ஆலயங்கலாக்கி
நம் அறிவிற்கான கல்விச்சாலைகளாக்கி
இவ்வாறு மதிகெட்டு
நாதியற்ற சூழல்களை
கொண்ட நாம்,
இன்று
நம் பலத்தை உணர்வதே...
தவம்.
அதுவே முதல் கடமை.
ஆரோக்கியத்திற்கான முதலுதவி.
ஆம்
இறை என்பது ஒன்றே,,,.
என்று ஒருமைபாட்டுடன் இணைவது.
இணைந்த பின்
இறை என்பது நாமே என்று
புரிவது,
புரிந்து பின்
நன்மையாக காணுவது.
அதாவது
நன்மையை காணுவது.
காணுவது
காணப்படுவது
கேட்பது
கேட்கப்படுவது
உணர்வது
உணரப்பட்டது
என எல்லாமே...
நன்மை என்றும்
நன்மையே நாமென்றும்
என்றுணர்ந்த நிலையில்
நாமேன்பதே சிவமாகவும்
நன்மை என்பதே சக்தியாகவும்
அதாவது
விளைவை
வேறொன்றாகவும்,
விளைச்சலை
மற்றொன்றாகவும்
புரிந்த நிலையே
நன்மை தீமை என்ற பேதம்.
ஆதலால்
ஒன்றாக்குவோம்.
ஒன்றென்பதை இன்றே ஆக்குவோம்.
இன்றை
நன்றெனக்கொள்வோம்
நன்றே...
இனி என்றென்றும்
என கொள்வோம்.
நன்மை k எல்லாம்.
விஷயம்
விஷமாவதும்
விஷேசமாவதும்
அவ்விசயத்தின்
திசையை பொறுத்தது.
திசை என்பது விசையே
அதுவே நம் உடலின்
தசைகளாக...
தசைகளின் வழியே
ஊடுருவும் உணர்வுகள்
அதாவது
உணரும் தன்மைகள்.
அப்படியாயின் தசைகளே...
நமக்கும்
நமக்குண்டானதற்கான
உணர்வுகளுக்குமான
திரை.
ஆக
தசையின் விசைகளை பொறுத்தே
விளைச்சலின் விளைவுகள்.
அதாவது
விசேஷங்கள்.
ஆம்
விசேஷங்கள் என்பது
நம் கொண்டாட்டத்திற்கான
தருணங்களை தருவிப்பதற்கான
பெறுதலாக
நாம் கொள்ளும்வரை
அந்த விஷயங்கள்
விசேஷங்களாக குதுகலிக்கும்.
உற்சாகங்களை ஊற்றெடுக்கும்.
உணர்வுகளை
தன் இயல்புகளாக...
இறையின் கொடையாக,
நாம்
கொள்ளும் வரை
விசேஷங்கள் வியாபித்து
விசாலமான விளைச்சல்களாக
என்றென்றும்
நம் விருப்பங்களாக.
இவ்வகையான ஆதாரங்களை
ஆகாயமாகக் கொண்ட
நம்
மனத்தன்மைகளை
படைப்பாற்றலின் மகத்துவத்தை
மறந்த நிலையிலேயே
விசயங்கள் விஷமாகின்றன.
விஷமானபின்
விசாரணை மழுங்கடிக்கப்படுகிறது.
அதாவது
நம் கவனம்
மறுதலிக்கப்படுகிறது.
மறுமைகளின் மகத்துவம்
மறுக்கப்படுகிறது.
பின்
மறைக்கப்படுகிறது.
நமக்குண்டான
நன்மைகளுக்கெல்லாமுமான
காரணங்களாகவும்,
காரணங்களின்
கர்த்தாவாகவும்
என்ற
உயரிய சிந்தனைகள்
உதாசீனப்படுத்தும் பொழுது
உயிரோட்டம் தடைபடுகிறது.
ஆதலால்
உணர்வும்
நாம் உண்ணும்
உணவும்
விஷமாக
மற்ற உயிர்களும்
உயிர்க்கொல்லி எனும்
விஷக்கிருமிகளாக.
ஆக
நாம்
நமதெண்ணத்தை
நன்மையாக்குவோம்.
நன்மை k என
எல்லாவற்றையும்
போற்றுவோம்.
போற்ற துணிந்த மனிதன்
தோற்றதில்லை..
இது
எண்ணம் k யின் கூற்று.
கூற்றென்பது கூர்ந்த ஞானம்.
ஞானம் என்பதே நம் தேடல்.
தேடலே இத்தனை உருமாற்றங்களுக்குமான
படைப்பாற்றல்.
அதுவே பேராற்றல்.
பேராற்றலின் துணை கொண்டே
பேரறிவை உணர முடியும்.
ஆக
உணர்வே நம் மனம்.
மனமே நம் எண்ணம்.
எண்ணமே கடவுள்.
அதாவது
எண்ணம் k.
இவன் தத்துவமே...
ஒன்று.
ஒன்றே எல்லாமுமாக.
அந்த எல்லாமும் நன்மையாக.
நன்மையே நாம் காணும்
எல்லாமும்.
எல்லாம் நம் நன்மைக்காக.
ஆக
நன்மை k எல்லாம்.
nmk
@எண்ணம்k







No comments:
Post a Comment