என்னை ஊற்ற விளக்கனைந்த்தது.
அணைத்ததால்
அணைந்தது
அணைத்ததால் எரிந்தது.
அனைத்தபின்,
அனைந்தபின்- அனைந்தது..
அனைக்கும்முன்.
அரவனைக்கும்...
மாண்பு
அரண்மனைக்கும்
அரவான்- மனைக்கும்
அரிவாள் மனைக்கும்.
பால்
பேதமற்றது.முன்னது.
பின்னது
உயிர் பேதமற்றது.
அனைத்தும்,
ஆனபி ன்,
அரவற்றமது.
அவ்விடம்.
அரவமாக
பிணைந்த பின்
பருகியது-பரவசமான
பின் வியர்த்தது
பின் விம்மியது.
தளர்ந்தது
பின் தயங்கியது.
நடந்தது
பின் நனைந்தது.
அணைத்தல்
உரிதல்
பிணைத்தல்
- இவை இயங்குதல்.
நனைதல்
பருகுதல்
வியர்த்தல்
- இவை இயக்குதல்.
உருகுதல்-இயக்கம்.
இந்த நதி கீழ் மட்டும் அல்ல
மேல் நோக்கியும் பாய்கிறது.
இதில் மட்டும் தான்
இயக்குவது.
காமம்
ஞானத்தின்
இன்னொரு சொல்.
அலங்கரித்த பின்
அபிஷேகம் புரிவது
இந்த பூஜையில் மட்டும் தான்.
சிவன் பூஜை
சிந்தனைவசமானது
இவன் பூஜை
முந்தானை வசம்.
வெளிச்சம் கடந்து,
ஓசை ஒழிந்தது
வாசனை நுகர்ந்து
நீர் வழிந்தது
நிலம் குளிர்ந்தது.
முன்னம் மேடாயும்
பின்னம் சமனாயும்
நல்
ஏற்பாடுகள்தான்
போல...
பெண்ணுக்கும்
பெண்மைக்கும்.
பேதமற்றது காமம்.
காமம் அற்ற
மற்றவை
உயிர் அற்றது.
காமம் ஜீவனுக்கு சான்று.
காமம்
உருகுவதும்
உருவாவதும்
இயங்கி
இயக்கும்
இயக்கம்
காமம்.
மற்றவை
காமத்திற்கு மட்டுமே
இவ்வுடல்.
கண் கொண்டு,
காது கொண்டு,
நா கொண்டு,
நாசி கொண்டு,
இவை
அனைத்தும் கொண்ட
இந்த பை உட்பட
அணைத்துக்கொண்டாடவே.
இது பால் உணர்வு -
அருந்தும் போதே
உணர்வானதோ.
குட்டிகளுக்கு-பின் குட்டியிடுவதற்கு
என
இந்த
பாலுணர்வு
கவர்ச்சி விளம்பரமோ?
தேகத்திற்கு-
இனப்பெருக்கத்திற்கு-
for more/
xxtramix@youtube.com/
nmkamalg@youtube.com









No comments:
Post a Comment