எனக்குள்
ஏற்படும் உணர்வுகளை
அதாவது
எண்ணங்களை
வெளியே சொல்ல நேர்ந்தால்...
அது
கேட்பவர்க்கோ
என் பெருமையாகவோ
அல்லது
எனக்கே
அது
பெருமையாகவே அமைந்து விடுகிறது.. இருப்பினும்,
நான் கூறுவதும்...
அவர்கள்
கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது.
காரணம்
என்னை விட்டு
என் பெருமைகள் வெளியே
செல்வதாக
என் இறைவன்
எனக்கறிவித்த
இன்னொரு எண்ணங்களால்..
எண்ணங்களே வாழ்வு.
இப்புற வாழ்வை
நாம் விரும்பும் வரை
இறை உணர்வுகள்
அதாவது
எண்ணங்கள்
ஏணிப்படியாக வந்து
நம்மை ஏக்கங்களாக
எதையாவது கதை எழுதி ..
எழுத்தை விதி என்றும்
விதியை மறை என்றும்
நம்மை ஏமாற்றிக்கொள்ளும்.
இந்த விளக்கம் கூட அப்படியே.
மன்னிக்கவும்,
ஞானம் கிடைக்கும் வரை குழப்பம் தான்.
ஆம்
ஞானம் என்பதை
பெறும் பொருளாக கொள்ளும் வரை...
குழப்பம் இங்கு
குடும்பமாக,
இலட்சியமாக,
பெருமையாக,
தோல்வியாக,
துரோகமாக
மாறி மாறி வித்தை காட்டும்.
ஞானம் என்பது நம்மால்
நாம் உணரக்கூடியது.
உணர்தல் என்பது உண்மை.
உண்மை என்பது இருப்புணர்வு.
இருப்புணர்வு
நமக்கு அறிவித்தலின்
முதல் படியே
நமக்கு வரும் சோகமும் கவலையும்
என
இன்ன பிற வியாதிகளும்
காரணம் ஏதுமின்றி படைத்தலும்,காத்தலும்,அழித்தலும் நிகழாது.
ஆம்
எது படைத்தது?
ஏன் படைத்தது?
எதற்க்காக அழித்தது?
நாம்
இதுவரை அறிந்தது.
மற்றவர் நமக்கு கூறியது
மற்றவர்களுக்கு இன்ன பிற மற்றவர்கள் கூறியது. ஆக
இது தகவல் பரிமாற்றமே
தவிர
அறிவாகாது.
அறிவென்பது வெட்ட வெளிதனில்
இருந்து பெறுவது.
அதாவது உணர்வது.
இந்த
உணர்தலுக்கு பெயரே அறிவாகும்.
இந்த இறை அறிவிப்பே ஞானமாகும்.
ஞானம் என்பது பக்தியல்ல.
பக்தி என்பது
ஒரு பொருளை பொருளாக விரும்புவது.
அது
ஒரு போதும் ஞானமகாது.
இந்த
தெளிவே யோகம்.
யோகம் என்பது கூட
நான் இருக்கிறேன்,
என்ற
இருப்புனர்வை மறந்து
அதற்க்கு ஒரு உருவம் கொடுத்து..
அந்த
உடம்பை நேசிப்பது
நேசித்த,
இந்த உடம்பை பேணி காப்பதே யோகம்.
அவ்வகை யோகத்தின்
அடுத்த வகை கர்மம்.
அதாவது
செல்வம் சேர்ப்பதையும்,
புகழ் அடைவதையுமே...
கருத்தாக கொண்டு கடமையாற்றுவது.
ஆக
பக்தி-யோகம்-கர்மம் இவையனைத்தும் அடிப்படையில்லாத கற்பனையே..
இந்த தெளிவே ஞானம்.என்ற இந்த அடிப்படையில் இதுவும் இறை அறிவிப்பென்றே.
என கொள்ளும்....
எண்ணங்களால் பசி என்ற உணர்வை வெளிப்படுத்துவது யார்?
அது எண்ணமா?
அப்படியானால் அதற்குள் ருசி
என்ற தேடல்
என்ன?
அதுவும் கற்பனையான இவ்வுடம்பின் மாயமே. என்றால்...?
மாய விளிம்பிற்க்குள்
ஏனிந்த போராட்டம்?
எதற்கிந்த அவலம்.
ஆக
ஞானம் என்பது ஒரு கண்ணாடி.
என்ன? நினைக்கிறோம் எதுவாக
ஆசைபடுகிறோமோ?அதுவே அதுவானால்...
அதுவே
ஞானம் என்பது எப்படி?அறிவிடமையாகும்.?
கட்டுப்படுத்த முடியாத காமம்.
கவலைக்குள்ளாகும் கோபம்.
பிரிய முடியாத பாசம்.
மகிழ்ந்து தவிக்கும் அன்பு.
வெளிக்காட்ட துடிக்கும் திறமை.
இப்படி
இன்ன பிற குணங்களும்
மனிதனுக்கான சாபங்களா ?
அல்லது
மனிதனே
இறைவனை உணரும்
அல்லது
இறைவனாக...உணரும்
எண்ணத்தின் கேடா?
யார் கூறி?
எது தெளிய?....
தெளிவென்பது என்ன?
அமைதியாயிரு.
அதற்கு
பெயர் பொறுமை. ஆனந்தமாயிரு
அவன் தந்த கொடை. எதிர்பாத்திரு.
அவன் நன்கறிந்தவன்.
பெரும் கருணையாளன்.
மகத்தானவன்.
இரத்த கட்டியில் இருந்து
மனிதன் படைக்கப்பட்டான்.
என்ற விளக்கத்திற்கு,
முன்.
ஒரு திருடன்-
திருடன் என்றால் என்ன?
எதனை?
ஏன் திருடினான்?
எதற்க்காக?
அவன் திருடன் ஆனான்?
அந்த திருட்டுக்கான சூழல்...
ஏன் விழைந்தது?
இதற்க்கு யார்?
திரைக்கதை வகுத்தார்கள்?
எதன் அடிப்படையில்?
அந்த நியாயம் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது? கற்பிக்க பட்ட இவர்கள்,
எப்பொழுது பயின்றார்கள்?
அல்லது
அதனை பயிலத்தான் வந்தார்களா ? அப்படியாயினந்த,
பயிற்சிக்கு முன்...
ஏன்?
இந்த குடும்பம்,
காமம்,பொறாமை,இலட்சியம் கனவு?
இது
வெற்றி பெறக்கூடாதென்றே விதித்த சூதாட்ட களவு போல் உள்ள
இந்த
வாழ்வை கொண்டாடுவது எப்படி?
கொண்டாடியது யார்?
கொண்டாடுகிற...
வெற்றி பட்டியல் தான் என்ன?
எது? உண்மை.
எது?பொய்.
எது சத்தியம்?
எது தர்மம்?.,
தர்மம் என்றால்....
ஆறறிவு படைத்த மனிதன்...
தனக்கு
கீழான-அறிவுள்ளவற்றை
பார்த்து,ஏன்?மிரள வேண்டும்.
அல்லது
அந்த
உயிரற்ற ஜடத்தின் ருசியை
ஏன்? விரும்ப வேண்டும்.
மீன் என்ற ருசியை கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும்-ஏன், சைவம் என்பவர்களும்
கடல் புஷ்பம் என்று
கதை மாற்றி உண்ணும்...,
இந்த
ருசியை மனிதனுக்கு உண்டாக்கியவன்
இறைவன் என்றால்?,
நீரில் உள்ள அழுக்கை
இவன் தின்பதானால்...
இந்த
கண் கட்டி வித்தைக்கு காரணம் என்ன?
காரியம் நிகழ்வது ஏன்?
இதில்
ஞானம் என்பது
நிகழ்ந்ததையும்,
நிகழப்போவதையும்...
பேசுவதிலும்,
சிந்திப்பதிலும்,
தர்கிப்பதிலும்,
ஆராய்வதிலிலும்....
நிகழ்காலம் சூறையாடப்படும் பொழுது.
அக்கனமாயிறு,
நிகழ்காலத்தில்
வேறு
எந்த சிந்தனையும்
இல்லாதிரு. கவனமாயிரு.
அமைதியாயிரு.
ஆத்மசொருபமாயிறு.
எனில்.
ஏன்? இத்தனை இயற்க்கை அழகு?
மலர்களில்...இத்தனை நறுமணங்கள்?
காற்றுகள்,
இதமாக சிலிர்க்க வைக்கும்
மழைதூரல்கள்....
என,
இந்த
இத்யாதிகளில்....
என்னை இழக்கவே நேரிடுகிறது.
இதில்
மற்றொரு குழப்பம்.
இவையனைத்தும் மாயை,
இதற்கப்பால்,
இந்த உலகம் உண்டென்றும்...,
அங்கே
ஒரு சுவர்க்கம் என்றும்..
அந்த
சுகத்திற்க்காக,
இங்கே
தர்ம-நியாயப்படி,
வாழ வேண்டும்.
என்றும்,
அதாவது...
எனக்கொரு,
ஆசை எழுந்தால் கூட
இவர்களின் தர்மப்படி
அதனை மறந்து....
அதாவது
மனசாட்சியை மறுத்து,
போலியாக-போலித்தனமாக...
வாழ வேண்டும்.
காரணம்,
அப்படியாயின் பார்க்க முடியாத மனம்,
அதாவது
எண்ணங்கள் தானே...
மறுமையையும் அறிவிக்கின்றன.
இத்தனை குழப்பத்திற்கும்,நடுவில் தானா?ஞானம். அல்லது
ஞானம் தான் உட்சமா?
அல்லது
ஞானம் என்பது,பிறரை அடிமை செய்து
ஏளனம் செய்யும் ஒரு வித அற்ப முயற்சியா? விளங்குவதற்கு தானே விளக்கம் தேவை.
விளங்கவே முடியாத விளக்கத்தை,
யார் விளக்க முடியும்?
அப்படி விளக்குபவர்களுக்கு,
எங்கனம்?விளக்கம் ஏற்ப்பட்டது?
யார் ஏற்படுத்தியது?
அப்படியாயின்....
மற்றவர்களும் வேறு படைபினரா?
இறை என்ற ஒன்றில்லாமல்,
இந்த இயக்கம் இல்லை.,
ஆனால்
இரை என்ற ஒன்றில்லாமல்...
எந்த ஜீவன்களும் இல்லை.
என்றிருக்க,
இந்த இரையை படைத்தது,இறைஎன்றால்...
தின்று உறங்கி,
தினவில்-மயங்கி,வென்று.
பெற்று,பெற்று-கெட்டு,
கெட்டு- தவறி,தவறி-மாண்டு....
ஏன்?
இப்படி ஒரு இயக்கம்?
இந்த
உலக இயக்கம் எதற்காக?
இப்படி
இயங்குவது ஒரு இயக்கமா?
அவ்வியக்க சுழற்சிக்கு ஒரு தலைவனா?
படைப்பிற்கே.........................- பரம்பொருளுக்கு.
அறிய முடியாத....
அல்லாத ஒன்றை-பரம்பொருளுக்காகவும்,
விளக்க முடியாத
இயக்கத்தை
உலக வாழ்க்கை என்றும்
கண்முன்னே வியாபித்திருக்கும் இவ்வியக்கத்திற்க்கும்,
மாயை என்றும்,
ஏனிந்த குழப்பம்?
எதர்க்கான தேடல்?இயற்கையே தீர்மானி...
என்னை தீர்மானி.?!....
nm கமல்ராஜ்.
ec go.












No comments:
Post a Comment